புதுக்குடியிருப்பு பகுதியில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் உட்பட மூவர் கைது.!

0
40

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி 1ம் வட்டாரம் மருதமடு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கிராம அபிவிருத்தி சங்கதலைவர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும், வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்குறுதிகளை கூறி மக்களிடம் 200 ரூபாய் பெறப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியினரால் படிவம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இணைந்து அவர்களிடம் இருந்த படிவங்களை பறிமுதல் செய்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இருவர் மற்றும் வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here