மகனை கொ.ன்.ற தந்தை விபரீத முடிவு.. இலங்கையில் சம்பவம்.!

0
108

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை ஒருவர் சிறைச்சாலையினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய சேருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆம் திகதி தெஹியத்தகண்டிய சேருப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து தனது 24 வயதுடைய மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here