மிரிஹான மாதிவெல வெல்சிறிபுர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி பழுது பார்க்கும் நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டை மாதிவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கால்வாயினுள் விழுந்து கிடந்துள்ள நிலையில் அவரது முச்சக்கரவண்டி கால்வாயிற்கு அருகில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.