சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.