அக்குரெஸ்ஸ ஹெனிகம பகுதியில் ஐயாயிரம் ரூபா பெறுமதியான 62 போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை (05) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் போலி நாணயத் தாள்களும் மீட்கப்பட்டள்ளன.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்