பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல உதவித்தொகை அதிகரிப்பு.!

0
107

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படாததால், மேற்படி மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுத் தீர்மானத்தின் மூலம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த முன்மொழிவை கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் வகையில் மஹபொல புலமைப்பரிசில் 7,500 ரூபாவாகவும், உதவித்தொகை 6,500 ரூபாவாகவும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here