அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.