நீர்கொழும்பு – மங்குளிய பிரதேசத்தில் மாமனாரை மருமகன் கொலை செய்துள்ளார்.
நேற்று (09) மாலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருமகன் தனது 40 வயதான மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைப் கைது செய்து நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.