யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
அந்நிலையில் திங்கட்கிழமை (09) இவருக்கு உணவு கொண்டு சென்றவர் வீட்டில் இவரது நடமாட்டத்தை காணாது அயல்வீட்டுக்காரர்களுக்கு அறிவித்து வீட்டினுள் சென்று பார்த்த போது அவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.