யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியின் பாதம் மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு துண்டாடப்பட்டுள்ளது
விபத்தில் காயமடைந்த சாரதியை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் துண்டாடப்பட்ட பாதத்தையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.