திஸ்ஸமஹாராம – ரபர்வத்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த இரு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.