அம்பாறை – காரைத்தீவு வீதியில் மாவடிப்பள்ளி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறையில் இருந்து காரைத்தீவு சந்தி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் அவரது மகளும் படுகாயமடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை 10, சாலி வீதியில் வசித்து வந்த 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வெயங்கொடை – மினுவாங்கொடை வீதியின் 20 ஆம் தூணுக்கு அருகில், வீதியைக் கடந்த பாதசாரி பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பெண் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். வத்ததர – வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.