முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது.!

0
127

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் 18.09.2024 அன்று கைதுசெய்துள்ளார்கள்.

விசுவமடு கிழக்கினை சேர்ந்த 33 அகவையுடைய சந்தேக நபர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

15 அகவை உடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறிப்பிட்ட அரச உத்தியோகத்தரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here