யாழில் கள்ள தொடர்பில் இருந்த மனைவி.. கையை வெ.ட்.டி எடுத்த கணவன்.!

0
114

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சந்தேக நபரின் மனைவி வீட்டின் அறைக்குள் இருந்து இரகசியமாக தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த கணவன் தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

காயமடைந்த 41 வயதுடைய மனைவி தெலிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here