கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
அந்நிலையில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டியவேளை பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனை அடுத்து தாயையும் குழந்தையையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்நிலையில் குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின்போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.