முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி கிராம பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவரின் தாலிக்கொடி உந்துருளியில் பயணித்த கொள்ளையர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல இலட்சம் பெறுமதியான தாலிக்கொடியினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாலிக்கொடியினை அறுத்து சென்ற கொள்ளையர்களின் உந்துருளி இலக்கம் குறித்த பொண்ணினால் அடையாளம் காணப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
புதுக்குடியிருப்பு பகுதிகளில் தனிமையில் இருக்கும் பெண்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், நிகழ்வுகள் இடம்பெற்ற வீடுகள் போன்றவற்றை இலக்கு வைத்து கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக எமது செய்தித்தளம் அறிந்துள்ளது. எனவே சந்தேகப்படும்படி யாரும் நடமாடினால் உடனே பொலிஸாருக்கு அறியப்படுத்துங்கள். கவனத்துடன் நடமாடுங்கள்.