புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்; கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!

0
87

அண்மையில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 scholarship exam) வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு (Ministry of Education) புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர (Thilaka Jayasundara) தெரிவித்தார்.

எனினும் விசாரணைகளின் பின்னர் நியாயமான தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் நேற்று (23) கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here