இலங்கையை சுற்றி நடக்க வெளிக்கிட்ட கிளிநொச்சி மாணவன்..!

0
36

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று ஆரம்பித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணம் இன்று ஆரம்பித்ததாக அவரது தந்தை குறிப்பிடுகிறார்.

இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் குறித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.

குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சுற்றி நடப்பது என்பது இலேசான காரியம் அல்ல.. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்,

உங்கள் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here