5 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – சித்தப்பா கைது.!

0
61

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜன உதான கம்மான யப்பாம ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

இந்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளவர். அப்போது சந்தேக நபர் கடந்த 23 திகதி இந்த சிறுமியை தனது வீட்டில் அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்று கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அத்துடன் 23 ம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் தாயாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (27) லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுமியின் தூரத்து உறவு முறையில் சித்தப்பா என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here