இன்று (02) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

0
103

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில், ஒரு வருடத்திற்கு பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜூன் 8 ஆம் திகதி இறுதியாக டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 300 ரூபாவுக்கும் குறைவாக காணப்பட்டிருந்தது.

இதேவேளை, கனேடிய டொலரின் இன்றைய விற்பனை விலை 223.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 333.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 319.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here