இரு குழுக்களிடையே மோதல் – 17 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

0
87

மஹவெல – உல்பத்த பிரதேசத்தில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், மடவளை உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரும்பு கம்பி, முகக்கவசம் மற்றும் பல கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here