மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்த மூவர் கைது.!

0
25

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை உள்ளடக்கி அவரை அவமதிக்கும் வகையில் சிலர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒட்டியமை தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 41 வயதுடைய இருவரே கைதுசெய்யப்படடுள்ளனர்.

இவர்கள் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் அதிகமான சுவரொட்டிகளை அச்சிட்டு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here