யாழில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு.!

0
96

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தின் போது பலத்த காயமடைந்த மாமுனை பகுதியை சேர்ந்த கடற்புலி முன்னாள் போராளியும், கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டுவந்தவருமான புரட்சி (நடேசு பரமேஸ்வரன்) யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் விபத்து குறித்து மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here