கணவனின் வாயை கட்ட முற்பட்ட மனைவி – பின்னர் நேர்ந்த சோகம்..!

0
96

நொச்சியாகம, வல்பலகமவில் வீடொன்றில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் குடும்பத் தகராறு இருப்பதாக 119 அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அந்த முகவரிக்கு சென்று சோதனை செய்தனர்.

இதன்போது வீட்டில் மயங்கி கிடந்த ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, வைத்தியர்கள் அவரை பரிசோதித்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்பலகம, நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது, அயலவர்களை தகாத வார்த்தைகளில் திட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழிந்த நபரின் வாயை துணியால் கட்ட மனைவி முற்பட்ட போது குறித்த நபர் மயக்கமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி (42) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here