முள்ளியவளையில் மாணவியின் தங்கச்சங்கிலி அறுப்பு.!

0
82

முள்ளியவளை நகர் பகுதியில் வீதியில் வைத்து மாணவி ஒருவரின் தங்கச்சங்கிலி அறுக்கபட்ட சம்பவம் ஒன்று நேற்று (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு வகுப்பிற்காக உயர்தர மாணவி ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த மாணவி வகுப்பினை முடித்து விட்டு பேருந்து நிலையம் நாேக்கி நடந்து சென்ற போது முள்ளியவளை பிராந்திய சுகாகார சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே காப்பவுண் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here