யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
111

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here