இசை நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.. போலிஸார் தீவிர விசாரணை.!

0
92

எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று (08) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கடந்த 7 ஆம் திகதி எல்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here