இலங்கையில் இன்று (11) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.!

0
185

இலங்கையில் கடந்த சில மாதங்களாக (Sri Lanka) தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலையானது இன்று (11.10.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,434 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 191,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 209,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 193,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here