மட்டக்களப்பில் சோகத்தை ஏற்படுத்திய மாணவியின் பிரிவு.!

0
62

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி. அ.வர்ஷாயினி ( 13-வயது) மாணவி நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் தனது கல்வியை தொடர்ந்துகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி விளையாட்டிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்ட இம் மாணவி இவ் வருடம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அளவிலான கராத்தே போட்டியொன்றில் பதக்கம் வென்ற மட்/மமே/ கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலய கராத்தே அணியிலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவியின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இம் மாணவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here