பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மருமகனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,..
சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட மருமகனுக்கும் அவரது மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் எல்லை மீறியதில் கொலை செய்யப்பட்ட மருமகன் தனது மனைவியை தாக்க முயன்ற போது மாமனார், மருமகனின் தலையில் பொல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான 65 வயதுடைய மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மெலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.