யாழில் பிறந்து ஒரே நாளில் உயிரிழந்த ஆண் குழந்தை.!

0
65

பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவமொன்று யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அல்வாய் தெற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 08 ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மறுதினமான 09 ஆம் திகதியன்று மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் அன்றைய தினம் மாலை 1.30 மணியளவில் குறித்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையிலும் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. இந்நிலையில் குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here