30 வயசு ஆச்சு.. ஆனா இன்னும் திருமணத்தை பற்றி யோசிக்காத ஆண்கள் – கண்டிப்பா இத படியுங்க.!

0
53

இப்போதெல்லாம் பல ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏன் 30 வயது ஆனால் கூட திருமணத்தைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

காலம் மாற மாற மாற திருமண வயது மாற ஆரம்பித்துவிட்டது முன்பு ஆண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது ஆனால் இன்று ஆண்களுக்கு 30 வயது ஆகியும் திருமணம் நடைபெறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சில ஆண்க வீட்டில் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தாலும் கூட ஆண்கள் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர். அது ஏன் தெரியுமா? தாமதமாக திருமணம் செய்வது என்பது தவறல்ல. ஆனால், இப்படி தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்களின் ஒவ்வொரு கருத்துக்களும் வித்தியாசமானது. எனவே, தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு பின்னால் உள்ள சில காரணங்களை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதற்கான காரணங்கள்:

1. பொருளாதாரம்:
ஆண்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இல்லாததால் அவர்கள் திருமணத்தை தாமதமாக செய்து கொள்ள விரும்புகிறார்கள். இப்போதெல்லாம், ஒவ்வொரு ஆணின் முதல் கவனம் அவனது தொழில். அதாவது, ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு முன் ஒரு நல்ல வேலையில் அல்லது வியாபாரத்தில் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது எந்த நோக்கத்தில் தான் ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.

2. பொறுப்புகள்:
இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் மனைவி, குழந்தைகளின் பொறுப்பை ஏற்க வேண்டும். எனவே, சில அதற்கு தயாராக இல்லை. மேலும், அவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவே விரும்புகிறார்கள். இதனால் தான் சில ஆண்கள் திருமணத்தை தாமதமாக செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

3. சுதந்திரமாக வாழ:
திருமணத்திற்கு பிறகு மனைவி, குழந்தைகள் என வந்தால் தன்னால் சுதந்திரமாக இருக்க முடியாது என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் மிக குறைவான கட்டுப்பாடுகள் மற்றும் எந்த கவலையும் இல்லாமல் எங்கும் செல்ல முடியும். அதனால் தான் இப்போதெல்லாம் ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

4. சரியான துணையை கண்டுபிடிக்க முடியாததால்:
சிலர் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு பின்னாலில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில ஆண்கள் தங்களது சிந்தனையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இதன் நன்மை என்னவென்றால், அவர்கள் 30 வயதிற்கு பிறகு ஒரு துணையை தேர்வு செய்தால், அந்தப் பெண்ணும் முதிர்ச்சி அடைந்தவள் என்பதால், இருவரும் நன்றாக புரிதலுடன் வாழமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here