யாழ் வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனது குழந்தைக்கு ஏடு துடக்கிவிட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு திரும்பும் வழியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பாலத்தில் கடந்த மூன்று நாட்களில் ஆறு விபத்துக்கள் இடம் பெற்று அதில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
எனவே மழைக்காலம், பனிக்காலங்களில் பயணிகள் அவதானமாக பயணிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.