களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
71

களுவாஞ்சிக்குடியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மையில் இன்று (13) பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 16 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலைலை சேர்ந்த ரவீந்திரன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here