இஸ்ரேல் நாட்டிற்கு இப்போது எந்தளவுக்கு நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் ரத்தன் டாடா மறைவைக் கேட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தமடைந்துள்ளார். மேலும், ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
நமது நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த அக். 9ம் தேதி உயிரிழந்தார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பிரச்சினை நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் என்று சுற்றிச் சுற்றி மோதல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மோதல் பெரிதாக வெடிக்கலாம் என்ற சூழலே நிலவி வருகிறது.
ஆனால், இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் தாண்டி டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிக்கு நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நெதன்யாகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சாம்பியன் ரத்தன் டாடா என்றும் குறிப்பிட்டுள்ளார்,