கொழும்புக்கு சைக்கிளில் சென்ற 14 வயது மாணவி – பிரதமரிடம் விடுத்த கோரிக்கை.!

0
77

பிரதமருக்கு 14 வயது மாணவியால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

அதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி இந்த மகஜரை அவர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் இந்த முயற்சிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here