முட்டை விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

0
113

அண்மையில் முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது மீண்டும் முட்டை விலை 45 ரூபாயை கடந்துள்ளது.

சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை உற்பத்தி குறைவினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here