லான்ட்மாஸ்டரை ஓட்டி சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
49

தனது நண்பருக்காக வாங்கிய லான்ட்மாஸ்டர் ரக உழவு இயந்திரத்தை ஒட்டி சென்றபோது குறித்த உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது நண்பர் வாங்கிய உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்று வீட்டுக்கு அருகில் திரும்ப முற்பட்ட போது அருகாமையில் உள்ள ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

இவர் தனது நண்பர்களுக்கு உதவுவதில் மிகவும் விருப்பமுள்ளவர் எனவும், உழவு இயந்திரத்தை தனது நண்பருக்கு கொடுக்க எடுத்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Accident 1st

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here