மலையக இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் – இருவர் கைது..!

0
79

ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கீழே தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

31,39 வயதுடைய மடூல்சீமை பட்டவத்த பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 30 ம் திகதி இரவு ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த விவேகானந்தன் சுஜீவன் எனும் இளைஞன் திருமண வீடொன்றிற்கு செல்வதாகவும் வருவதற்கு 5 நாட்கள் ஆகும் என தனது சகோதரியிடம் கூறிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இருப்பினும் 5 நாட்கள் கடந்தும் தனது மகன் இதுவரையில் வராததாலும் சந்தேகம் கொண்ட குறித்த இளைஞனின் பெற்றோர் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர். பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஹாலிஎல பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி சுஜீவனுக்கு செந்தமானதாக இருந்தாலும் அதன் முன்னாள் உரிமையாளரின் பெயரிலேயே சுஜீவன் தவணை கட்டணத்தை செலுத்தி வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் முன்னாள் உரிமையாளரை ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது சுஜீவனிடம் 480000 ரூபாய் பணத்தை கொடுத்து முன்னாள் உரிமையாளர் முச்சக்கரவண்டியை பெற்று கொண்டதாகவும் பின்னர் குறித்த முச்சக்கர வண்டியின் முன்னாள் உரிமையாளரான மடூல்சீமை பட்டவத்த பகுதியை நபர் பணம் கொடுக்கும் கையடக்க தொலைபேசியில் பிடிக்கப்பட்ட புகைப்படத்தை பொலிஸாரிடம் காட்டியதாகவும் மேலும் தன்னிடம் முச்சக்கர வண்டியை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு தான் ஒரு பெண்ணுடன் போவதாகவும் சுஜிவன் எழுதிய கடிதம் ஒன்றை பொலிஸாரிடம் காட்டியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று மாலை முச்சக்கர வண்டியின் முன்னாள் உரிமையாளரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் முச்சக்கரவண்டியின் உரிமையாளரின் சங்க நண்பர் ஒருவர் தனக்கு பணம் கொஞ்சம் தேவைப்படுவதாகவும் பணம் இருந்தால் தருமாறு தன்னிடம் கோரியதாகவும் தன்னிடம் பணம் இல்லை என சக நண்பரிடம் கூறிய போது நண்பன் நீ விற்பனை செய்த முச்சக்கர வண்டி இன்னமும் உனது பெயரில் தானே உள்ளது. எனவே லீஸிங் முறையில் மேலதிகமாக பணம் எடுக்க முடியும் எனவே நீ முச்சக்கர வண்டியை விற்பனை செய்த நபரிடம் கேட்டுப்பார் என கூறியதாக குறித்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பின்னர் தானும் ஹாலிஎல ரொஸட் பகுதியில் உள்ள சுஜிவனிடம் தங்களுக்கு பணம் சற்று அவசரமாக தேவைப்படுகிறது எனவும் லீஸிங் முறையில் மேலும் பணம் கொஞ்சம் பெற்று தருமாறும் தாங்கள் லீஸிங் பணத்தை கட்டுவதாக கூறியதை தொடர்ந்து அதற்கு சுஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அதன் பின்னர் தங்களுக்கு மலசலகூடத்திற்கூ கழிவு குழி வெட்டும்போது தங்களுக்கு மாணிக்கக் கற்களும் மேலும் சில விலைமதிப்பற்ற பொருட்கள் கிடைத்ததாகவும் அதே பிட்டமாறுவ பகுதியில் மறைத்thu வைத்திருப்பதாகவும் அதை எடுத்து விற்பனை செய்வதற்கு 5 நாட்களுக்கு மேல் செல்லும் எனவும் முச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வருமாறும் குறித்த பொருட்களை விற்பனை செய்ததன் பின்னர் மூவரும் பணத்தை பிரித்து எடுத்துக் கொள்வோம் என ஆசைக் காட்டியே சுஜிவனை வரவழைத்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் வரவழைக்கப்பட்டு மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதிக்கு கூட்டிச் சென்று அங்கு வைத்து தானும் தனது நண்பனும் இணைந்து சுஜிவனை தாக்கியதாகவும் தாக்கும் போது கீழே விழுந்த சுஜீவன் மூச்சுப்பேச்சு இன்றி காணப்பட்டதாகவும் பின்னர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பள்ளத்தாக்கின் கீழே தூக்கி எறிந்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த நபரின் சக நண்பரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது உடன் மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதிக்கு விரைந்த பொலிஸார் சுஜீவனை வீசியதாக கூறப்படும் பள்ளத்தாக்கில் இன்று காலை முதல் தேடுதலை மேற்கொண்ட போதிலும் சீரற்ற காலநிலையின் காரணமாக உடலை கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் எனவே நாளைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் மீண்டும் தேடுலை மேற்கொள்ள உள்ளதாக மடூல்சீமை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தேவத்த ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மடூல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here