புத்தளத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!

0
55

புத்தளம் – புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தோட்டமொன்றில் காவலாளியாக கடமைபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here