என்னுடைய வீடியோக்களை நீக்கிடுங்க… நடிகை ஓவியா போலீசில் புகார்..!

0
37

இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும், ட்விட்டர் பக்கத்திலும் இருந்து தன்னுடைய ஆபாச வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் போலீஸ் கமிஷனருக்கு நடிகை ஓவியா இ-மெயில் மூலம் புகாரளித்து உள்ளார்.

நடிகை ஓவியா இ-மெயில் மூலமாக கொடுத்துள்ள புகாரைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 3 வீடியோக்கள் நீக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ட்விட்டரிலும், டெலிகிராமிலும், சில ஆபாச இணையதளங்களில் 17 வினாடிகள் ஓடும் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா என்று கூறப்பட்ட நிலையில், ஓவியாவின் கையில் இருக்கும் டாட்டூவைக் காட்டி வீடியோவை ரசிகர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் பக்கங்களில் பரவி வந்தனர். இந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா தானா? இல்லை டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது.

நடிகை ஓவியவிடம் இது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்த போது, ‘என்ஜாய்’ என்று பதிவிட்டிருந்தார். ரொம்ப நீளம் குறைவாக இருக்கிறது என்று ஒரு ரசிகர் வருத்தத்துடன் பதிவிட்டிருந்த நிலையில், ‘அடுத்த முறை ப்ரோ’ என்று பதில் அளித்திருந்தார் நடிகை ஓவியா.

கடந்த சில நாட்களாக இது குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த நடிகை ஓவியா, இந்நிலையில் இணையதளங்களில் இருந்து தன்னுடைய ஆபாச வீடியோவை நீக்கக் கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு இ-மெயில் மூலமாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனுவைத் தொடர்ந்து, அந்த ஆபாச வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் கமிஷனர் இளங்கோ கடிதம் அனுப்பி இருந்தார். கமிஷ்னரின் கடிதத்தைத் தொடர்ந்து தற்போது ட்விட்டர் தளத்தில் இருந்து 3 ஆபாச வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஹெலன் நெல்சன் (ஓவியா) இ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். தொடர்ந்து ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை மேற்கொண்டோம். இது தொடர்பாக எக்ஸ் இணையதளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது 3 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. சில ஆபாச இணையதளங்களிலும் வீடியோக்கள் உள்ளன. அதையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நடிகை ஓவியாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். அதன் பிறகே வழக்கு பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தாரிக் என்ற நண்பருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவருடைய நட்பை துண்டித்ததால், அவர் தான் ஆபாச வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் அவற்றை வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here