ஹமாஸ் தலைவனின் இறுதி நொடி – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்.!

0
101

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) கடைசி நிமிட காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

காஸாவில் (Gaza) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவா் யாஹ்யா சின்வாா் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (17.10.2024) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டபோது, ஆளில்லா விமானம் மூலம், அவர் இருந்த இடத்தில் பதிவு செய்த காணொளியை தற்போது வெளியிட்டு இஸ்ரேல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளில்லா விமானம் குறித்த கட்டிடத்திற்குல் செல்லும் போது, சின்வாரை அடையாளம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர் ஹமாஸ் வீரர்களில் ஒருவர் என்றே நினைத்து இஸ்ரேல் படை தாக்கியுள்ளது. அதன் பிறகு அருகே சென்று பார்த்த போது தான் அது ஹமாஸ் தலைவர் சின்வார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்த அதிர்ச்சி காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here