நாட்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுண் ஒன்று 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஒருவாரத்தில் தங்கத்தின் விலை 7 ஆயிரம் ரூபாயினால் அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலை மாற்றமே உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக் காரணம் என்று பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (19) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த வாரம் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், அது வரும் நவம்பா் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசெம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுண் ஒன்று 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயைத் தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.