முழங்காவில் பகுதியில் நடந்த விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
70

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (19) மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வேரவில் – பூநகரி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதோடு அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

கடந்த 11ஆம் திகதி இந்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வலது பக்கம் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

இந்நிலையில், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here