தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
183

தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயது மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, நேற்றையதினம் (20) காலையிலே வீட்டை விட்டுச் சென்ற 17 வயதான இரு மாணவிகளும் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அவருடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்பது விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here