இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாஸ்போர்டில் நல்லூர் கோவில்..!

0
47

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.

மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அவையாவன..

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை

1 நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here