முல்லைத்தீவு பகுதியில் தனது நண்பி வீட்டுக்கு சென்ற யுவதிக்கு நடந்த சம்பவம்.!

0
145

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப் பகுதியில் தெரிந்த அயலவர்களின் வீட்டிற்கு சென்ற இளம் யுவதி ஒருவர் அங்கிருந்த இளைஞனால் பாலியல் துன்புறுத்தல் முயற்சிற்கு உள்ளான நிலையில் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்..

அயலில் உள்ள வீட்டிற்கு நண்பியினை தோடி சென்ற குறித்த யுவதி நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவன் இருந்துள்ளார். வீட்டிற்குள் வரசொல்லி யுவதியினை அழைத்துவிட்டு காமவெறியில் குறித்த யுவதியினை கட்டிப்பிடித்து பெண்ணின் உறுப்புக்களை கடித்து உள்ளிட்ட பாலியல் துஸ்பிரயோக முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இருந்து தப்பி சென்ற யுவதி தனக்கு நடந்தவற்றை வெளியில் தெரியமுன்னர் வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவேளை வீட்டாரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட் சிறுமி கொடுத்த வாய் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே யுவதிகள் இவ்வாறு பாலியல் கொடுமையில் இருந்து தப்பிக்க யுத்திகளை கடைப்பிடியுங்கள் எதிர்த்து நில்லுங்கள் தற்கால யுவதிகளின் மனநிலையில் மாற்றம் வேண்டும் இவ்வாறு பாதிக்கப்படுவதால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று அல்ல தற்கொலைசெய்யும் முடிவிற்கு செல்லும் யுவதிக்கு ஏன் ஒருஇளைஞனை தாக்கிவிட்டு தப்பிசெல்ல மனம் வரவில்லை.

சிந்தியுங்கள் இவ்வாறன தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. அதற்கு போதைவஸ்த்தும் ஒரு காரணமாக அமைகின்றது. கிராமத்தில் உள்ள பெரியவர்கள் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளையும் உங்கள் கிராமத்தினை நல்நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உங்கள் கைகளிலும் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here