மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!

0
118

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) கஹவத்தை, வென்னப்புவ மற்றும் திருக்கோவில் பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பெல்மடுல்ல – நோனாகம வீதியில் வெல்லதுர பிரதேசத்தில் மழையுடன் கூடிய வானிலை காரணமாக மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, 59 வயதுடைய பலாங்கொடை, சந்துங்கம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் – கொழும்பு வீதியின் கொலிஞ்சாடிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரேரா மாவத்தை, வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் அக்கரைப்பற்றுவில் இருந்து பொத்துவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் இடது பக்கம் கவிழந்து முகத்துவாரம் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர், சாரதியும், பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்து திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் பின்னால் பயணித்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார். விநாயகபுரம் 03 இல் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here