இலங்கையில் அறுகம்பை குடா பகுதியில் நடப்பது என்ன.. வெளியான மற்றுமொரு அறிவிப்பு.!

0
105

மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும், அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பயண ஆலோசனை ஒன்றை வௌியிட்டுள்ள அமெரிக்க தூதரகம், சந்தேகப்படும்படியான எதைக் கண்டாலும் 119 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய இராச்சியம் இலங்கையில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here