பிக்குவிடம் சிக்கிய 5 பாடசாலை மாணவர்கள்..!

0
66

பிரபல பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கலவானை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கலவானை பொலிஸார் பிக்குவை கைது செய்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இதே பாடசாலைக்கு அருகாமையில் குறித்த விகாரை அமைந்துள்ளதுடன், குறித்த பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஐந்து சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கலவானை ஆதார வைத்தியசாலையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here